புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மன அழுத்த சூழ்நிலையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோர்களால் பிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை காரணமாக வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் செயல்பாடுகள் இன்மை போன்ற பல நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பல நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளின் மன நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பிள்ளைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.