தான் இறந்து விடுவேனோ என்று பயந்து பேரனை கொன்ற முதியவர்! 

தான் இறந்து விடுவேனோ என்று பயந்து பேரனை கொன்ற முதியவர்! 

தமிழ் மாதமான சித்திரையில் பேரக்குழந்தை பிறந்தால் குடும்பத்தில் பேராபத்து ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் புகைப்படத்தில் இருக்கும் முதியவர் தனது 1.5 மாத  பேரனைக் கொன்றது தெரியவந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு அரியலூரில் இந்த மனதை உலுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் பேரனுடன் விளையாடிய 58 வயதான முதியவர் குழந்தையை ஒரு பீப்பாய் தண்ணீரில் போட்டு போர்வையால் சாகும் வரை மூழ்கடித்து மூச்சுத் திணற வைத்து கொடூரமாக கொலை செய்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று ஜெயங்கொண்டம் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். 

அந்த முதியவர் குழந்தை பிறந்தது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஜோதிடரை அணுகியதாகவும், அவர் குழந்தை பிறந்த நேரம் மிகவும் அசுபமானது என்றும், முதியவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் மூட நம்பிக்கையை நம்பி தன்னுடைய சொந்த பேரனையே கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

பொதுவாக ஆடியில் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் வாய்ப்புள்ளது என்றும், சித்திரையில் ஆண் குழந்தை பிறப்பது கூடாது என்றும் தமிழர் மரபில் ஓர் ஐதீகம் நிலவி வருகின்றது.