தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகம் - இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தல்!
பண்டிகைக் காலங்களில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50 சதவீத எரிபொருள் கையிருப்பை பேணுமாறு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக அறிவுறுத்தியுள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பண்டிகைக் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகம் செய்யுமாறும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.