சிக்கன்குனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி மற்றும் மூக்கைச் சுற்றி கருமையாக மாறுதல் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாகும் என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.