பவித்ரா வன்னியாராச்சியின் மனுவை விசாரிக்க மேல் நீதிமன்றம் அனுமதி!
மன்னார் - விடத்தல்தீவு, காப்புக்காடு வலயத்தின் ஒரு பகுதியை வனவிலங்கு பாதுகாப்பு பகுதியிலிருந்து விடுவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி, வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு மேல் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரிதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
காப்புக்காடு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள விடத்தல்தீவின் காப்பு வலயத்தில் இருந்து சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் நிலத்தை இறால் பண்ணைக்காக விடுவிப்பதற்கு வனஜீவராசிகளுக்குப் பொறுப்பான அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டிய, இந்த நடவடிக்கையினால் அந்த வனப்பகுதிக்குள் நுழையும் புலம்பெயர் பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுமெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.