திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் விபத்து!
திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இன்று காலை (22) இடம் பெற்ற வேன் விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
திருகோணமலையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனின் டயருக்கு காற்று போனதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.