பஞ்சிகாவத்தை வாகன உதிரிப்பாக விற்பனையகத்தில் தீப்பரவல்! 

பஞ்சிகாவத்தை வாகன உதிரிப்பாக விற்பனையகத்தில் தீப்பரவல்! 

கொழும்பு – பஞ்சிகாவத்தை பகுதியில் வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் காரணமாக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.