லஞ்சம் பெற முயன்ற 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

10,000 ரூபாவை லஞ்சமாக பெற முயன்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஹாவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, போக்குவரத்து குற்றச்செயல் வழக்கில் அபராதத் தொகையை குறைப்பதற்காக மஹாவெல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, பணத்தை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே அவர்கள் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.