தடுப்பூசி மருந்து விஷமானதால் பெண் மரணம் - விசாரணைக்கு வலியுறுத்தும் சுகாதார தொழிற்சங்கம்!
இராகமை போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்ட, தடுப்பூசி மருந்து விஷமானதால், தாயொருவர் மரணித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார தொழில்வல்லுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இராகமை போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்ட, தடுப்பூசி மருந்து விஷமானதால், தாயொருவர் மரணித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார தொழில்வல்லுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயான, 23 வயதுடைய பெண் ஒருவரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், வயிற்றில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, அண்மையில் இராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உடலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக, அவர் உயிரிழந்தாரென, வைத்தியர்கள், குறித்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அறியப்படுத்தி உள்ளனர்.
எவ்வாறிருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக, குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் வினவியபோது பதிலளித்த பொலிஸார் தடுப்பூசி மருந்து விஷமானதால், குறித்த பெண் மரணித்தமை கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.
இது குறித்து, , இராகமை வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்புகொண்ட போதிலும், உரிய பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கருத்து வெளியிட்ட சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், குறித்த சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.