இந்து சமுத்திர கடற்பரப்பில் 5.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு!
இலங்கைக்கு தென்கிழக்காக இந்து சமுத்திர கடற்பரப்பில், 5.8 ரிக்டர் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்காக இந்து சமுத்திர கடற்பரப்பில், 5.8 ரிக்டர் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புவியதிர்வு களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை அண்டிய சில பகுதிகளில் சிறியளவில் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதும் குறித்த புவியதிர்வினால் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.