சமன் ரத்நாயக்கவிடம் 4 மணித்தியால இரகசிய வாக்குமூலம்!
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவானிடம் 4 மணித்தியால இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.