சிங்கள ஊடகவியலாளர் கைது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்!

இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான தரிந்து உடுவரகெதர தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

ஆணைக்குழுவின் விரைவுப் பதிலளிப்புக் குழு அண்மையில் பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஊடகவியலாளரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக மனித உரிமை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தரப்பினரிடமிருந்து அறிக்கைகளை கோரவுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.