அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் குறைப்பு!
ச.தொ.ச நிறுவனம் இன்று முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
ஒரு கிலோகிராம் சோயா மீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 580 ரூபாயாக விற்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 290 ரூபாயாக விற்கப்படுகின்றது.
அத்துடன், ஒரு கிலோகிராம் நெத்தலி 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 110 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் வெள்ளைப் பூண்டின் விலை 30 ரூபாயாலும் பெரிய வெங்காயத்தின் விலை 15 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளைப் பூண்டின் விலை 620 ரூபாயாகவும், பெரிய வெங்காயத்தின் விலை 195 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 299 ரூபாயாகும் என சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.