ஐ.சி.சி உலக கிண்ணத் தொடரிலும் தசுன் சானக்கவே தலைவர் - கிரிக்கட் சபை அறிவிப்பு!

ஆசிய கிண்ணத் தொடருக்கு பின்னர் எவ்வாறான எதிர்மறை விமர்சனங்கள் இருந்த போதிலும் எதிர்வரும் உலக கிண்ணத் தொடரிலும் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக தசுன் சானக்கவே செயற்படுவார் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

ஐ.சி.சி உலக கிண்ணத் தொடரிலும் தசுன் சானக்கவே தலைவர் - கிரிக்கட் சபை அறிவிப்பு!

அண்மையில் இடம்பெற்ற ஆசிய கிண்ணத் தொடரின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச இறுதிப் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்திந்தது. 

இதனையடுத்து தசுன் சானக்கவின் தலைமை பதவி தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன.

எனினும், அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் லசித் மலிங்க உள்ளிட்ட பல தரப்பினரும் தசுன் சானக்கவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், தசுன் சானக்கவே தொடர்ந்தும் தலைமைப் பொறுப்பை வகிப்பார் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.