வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்கள் குறித்து ஐ.நா வில் எடுத்துரைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்கள் குறித்து ஐ.நா வில் எடுத்துரைப்பு!

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 54வது கூட்டத்தொடர் இம்மாதம் 11ம் திகதி தொடக்கம் யெனீவாவில் இடம்பெற்று வருகின்றது. இதில் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தாயகம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளையோர், பெண்கள் என தமிழர் உரிமை செயற்பாட்டாளர்களாக பலர் சுழற்சி முறையில் கலந்துகொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் சமபொழுதில் ஐ.நா வின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான குழுவின் 25வது கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 தொடங்கி செப்டெம்பர் 29ம் திகதி வரை நடைபெறும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான செயற்குழுவின் 131வது கூட்டத்தொடர் செப்டெம்பர் 18ம் திகதி தொடங்கி செப்டெம்பர் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

அதில் இரு குழுக்களும் இணைந்து இன்றைய நாளில் நடாத்திய இணை மாநாட்டில் தாயகத்தில் இருந்து வருகைதந்து கலந்துகொண்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அந்த மாநாட்டின் மையக் கருத்துக்கு அமைவாக த.மி.ழீ.ழ.த்தில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு போர்க் காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ச் சிறுவர்கள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தனர்.

அந்த மாநாடு முடிந்ததும் குறிப்பிட்ட குழுவினர் தாயகத்தில் இருந்து வருகைதந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் வந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

#tamilrights #tamilrightsactivism #tamilrightsactivist #tamilwomenactivists #tamilwomenactivists #youngtamilactivists #justicefortamilgenocide #mullivaikal #tamilgenocide #18may2009 #tamileelam #tamilnadu #Globaltamilmovement #freetamileelam