சாந்தனின் வித்துடல் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விதைக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கு உடுப்பிட்டியில் உள்ள சாந்தனின் அக்காவின் வீட்டில் இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டன.
அதன்பின் வித்துடல் வல்வெட்டித்துறையின் பல இடங்களிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி சாந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து மக்களால் தோள்களில் சுமந்தபடி எள்ளங்குளம் மயானத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விதைக்கப்பட்டது.