பொதுச் செயலாளர் நியமனத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது - ஞானமுத்து சிறிநேசன்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நியமனத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்காக போட்டியிட்டவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தால், நேற்றைய தினம் கட்சியின் மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுச் செயலாளர் தெரிவில் தமக்கு இணக்கமில்லை என கட்சியிலுள்ள பலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த விடயம் கட்சியின் புதிய தலைவரிடமும் பழைய தலைவரிடமும் கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.
பொதுச்செயலாளர் தெரிவின்போது வாக்களிப்புக்காக அழைக்கப்படாதவர்களும் இருந்துள்ளனர்.
எனவே அந்த வாக்களிப்பு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.
எனவே மீண்டும் பொதுச் சபையின் வாக்கெடுப்பின் மூலமாக பொதுச் செயலாளர் பதவிக்குரிய நபரைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.