உமா ஓயா நீர்மின்சாரத் திட்டத்திலிருந்து 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

உமா ஓயா நீர்மின்சாரத் திட்டத்திலிருந்து 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உமா ஓயா நீர்மின்சாரத் திட்டத்திலிருந்து 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

மொத்தமாக 120 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்ததிட்டத்திலிருந்து முதல் கட்டமாக 60 மெகாவோட் மின்சாரம் இவ்வாறு வெற்றிகரமாக தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

பல்வேறு அரசாங்கம் எதிர்ப்பு போராட்டங்கள், கொவிட் தொற்றுநோய் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திட்டத்தை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டத்தின் ஊடாக இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 60 மெகாவோட் மின்சாரத்தை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் தேசிய கட்டமைப்பில் இணைக்க முடியும் என திட்ட அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.