பதுளை - கோட்டைக்கிடையிலான ரயில் சேவை பாதிப்பு!

பதுளை - கோட்டைக்கிடையிலான ரயில் சேவை பாதிப்பு!

தியத்தலாவ ஹப்புத்தளைக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று (23) காலை பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று (23) காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மனிகே ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்திலும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு அஞ்சல் ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையுடன் ரயில் பாதையில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் தியத்தலாவ இராணுவ முகாம் அதிகாரிகள் ரயில் பாதையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.