துப்பாக்கி சூடு; 7 பேர் கைது!உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரை சம்பவம்

வத்தளை, உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20) நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரி 20 ஆம் திகதி இரவு உஸ்வெட்டிகெய்யாவ மோர்கன்வத்த கடற்கரையில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.