பொருட்கள் மற்றும் பொதி சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு - ரயில்வே திணைக்களம்

பொருட்கள் மற்றும் பொதி சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு - ரயில்வே திணைக்களம்

தொடருந்து பொருட்கள் மற்றும் பொதிகள் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதியின் எடை மற்றும் கொண்டு செல்லப்படும் தூரம் என்பவற்றின் அடிப்படையிலே இதுவரை கட்டணம் அறவிடப்படப்பட்டு வந்தது.

இந்தநிலையில், புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பொதிகள் போக்குவரத்துக்காக அறிவிடப்படும் கட்டணத்துக்கு மேலதிகமாக பொதியின் பெறுமதியின் அடிப்படையில் மற்றுமொரு கட்டணம் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மருந்துகள், வாகன உதிரிப்பாகங்கள், கண்ணாடி மற்றும் மின்சார உபகரணங்களுக்கும் இந்த கட்டணம் அறவிடப்படவுள்ளது.

No description available.