நாடு திரும்பினார் பிரித்தானிய இளவரசி!

பிரித்தானிய இளவரசி ஹேன் இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்.

நாடு திரும்பினார் பிரித்தானிய இளவரசி!

இன்று அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி மற்றும் அவரது குழுவினர் இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான UL-505 இல் விமானமூடாக பிரித்தானியா நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 10 ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைந்தார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய குறித்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.