பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு அதிர்ஷ்டம்!
இலங்கைக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுபித்துள்ளதுடன், பல தடைகளை தளர்த்தியுள்ளது.
இதன்மூலம், இலங்கையின் சுற்றுலாத் துறையானது அனைத்து முக்கிய மூலச் சந்தைகளிலும் பல மடங்கு நன்மையை எதிர்பார்க்கப்படுகின்றது.
இது வரவிருக்கும் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் உடனடியாக குறிப்பிடத்தக்க ஊக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குப் பின்னர், ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் புதுப்பித்த பயண ஆலோசனை நடைமுறைக்கு வந்தது.
அவசரகால மருத்துவ சேவைகளுக்கான அணுகல், பாதுகாப்பு நுழைவுத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளை அணுகுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புதுப்பித்தல் காணப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ஆலோசனையில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகள் இல்லை.
கூடுதலாக, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உட்பட சுகாதார சேவைகளில் வரம்புகள் தொடர்பான முன்னர் குறிப்பிடப்பட்ட அபாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
பல நாடுகள் பிரித்தானிய பயண ஆலோசனையால் வழி நடத்தப்படுகின்றன, இந்த புதுப்பிப்பு எங்களின் அனைத்து உற்பத்தி சந்தைகளிலும் நன்மையை ஏற்படுத்தும்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்ட சமூகமான உரையாடல் மூலம் இந்த பயண புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.