உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்ப கோரல் இறுதி திகதி!

2023ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இணையவழி விண்ணப்ப கோரல்கள் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமானது.

இதன்படி, உரிய காலத்திற்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தவறும் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும்,  மீண்டும் விண்ணப்பிப்பதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட மாட்டாது எனவும் கல்வி  அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி  வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.