வடக்கு, கிழக்கில் சுயாட்சியை கோருவதற்கு இதுவே காரணம் - செல்வராசா கஜேந்திரன்!

தமிழர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தும் இடம்பெறுவதாலேயே வடக்கு, கிழக்கிற்கான ஒரு சுயாட்சியை தாம் கோரி வருவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் சுயாட்சியை கோருவதற்கு இதுவே காரணம் - செல்வராசா கஜேந்திரன்!

தமிழர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தும் இடம்பெறுவதாலேயே வடக்கு, கிழக்கிற்கான ஒரு சுயாட்சியை தாம் கோரி வருவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு பகுதியில் மதகுருமார் உள்ளிட்ட குழுவினர் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர், இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பௌத்த விகாரை அமைத்தல் மற்றும்  காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக பிரதேசத்துக்கு சென்று திரும்பிய இந்து, கத்தோலிக்க மதகுருமார்  மற்றும் ஊடகவியலாளர்களுடனான வாகனமொன்று பொலனறுவை - மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள கம்பிப் பாலத்துக்கு அருகில்  சுற்றிவளைக்கப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டு அவர்களில் சிலர் மீது அங்கிருந்தவர்கள் தாக்குதலும் நடத்தப்பட்ட முற்பட்டதாகவும் சம்பவத்துக்கு முகம் கொடுத்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கரடியினராறு பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவினோம்.

அதற்கு பதிலளித்த அவர், சீர்குலைப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற சிலர் வாகனமொன்றில் பிரவேசித்துக் கொண்டிருப்பதாக  கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அந்த வாகனங்கள் பிரதேசவாசிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இரு தரப்பினருடனும் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் குறித்த பகுதிகளுக்கு பிரவேசிக்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் தங்களுக்கு அறியப்படுத்தி தங்களையும் இணைந்துக்கொண்டு கள விஜயங்களை மேற்கொள்ளுமாறு தடுத்துநிறுத்திய குழுவினருக்கு அறிவுறுத்தியதாக அவர் எமக்குத் தெரிவித்தார்.