புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்

இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இதில் கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் அப்போஸ்தலிக் பிரதிநிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.