2024இல் செயற்படவிருக்கும் கொழும்பு துறைமுக கிழக்கு முனையம்!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாண பணிகளின் முதற்கட்டத்தை நிறைவுசெய்து, அதன் செயற்பாடுகளை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் கூடிய போதே துறைமுகங்கள் அமைச்சின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் 20 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இதனை முழுமையாகப் பூர்த்திசெய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் துறைமுகங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.