நாடளாவிய ரீதியில் மின்வெட்டு -உள்ளக விசாரணைகள் ஆரம்பம்!
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின் வெட்டு தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.