மட்டக்களப்பில் வீட்டிலிருந்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது!

மட்டக்களப்பில் வீட்டிலிருந்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது!

மட்டக்களப்பு (Batticaloa) காத்தான்குடியில் வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று (14.06.2024) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீட்டில் வசித்த இளம் பெண், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்
அதேவேளை, குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காத்தான்குடி பொலிஸார், சிசிரிவி‌ கமராக்களை சோதனை செய்ததையடுத்து, சந்தேக நபரை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் அங்கிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.