சீரற்ற காலநிலையால்  லாஃப் எரிவாயுக்கு தட்டுபாடு!

சீரற்ற காலநிலையால்  லாஃப் எரிவாயுக்கு தட்டுபாடு!

நாட்டில் நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லையென எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் சில வாரங்களாக லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.

அதன்படி, லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரித்தார்.

பிரதான நிரப்பு முனையத்தின் இருப்பிடமான மாபிமாவைச் சுற்றியுள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கி விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பலில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக எரிவாயு விநியோகிக்க முடியவில்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.