மன்னம்பிட்டிய பாலம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது!

மன்னம்பிட்டிய பாலம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது!

கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்குமாறு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, மன்னம்பிட்டி – அரலகங்வில  வீதியில் சேதமடைந்த பாலத்தை திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும்  அதிகாரிகள்  24 மணிநேரமும் வேலை செய்தநிலையில்   தற்காலிக இரும்பு பாலத்துடன் கூடிய வீதியின்
கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.

நேற்று காலை முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

இதில் சிறப்பு என்னவென்றால், வழக்கமாக 15 நாட்கள் வரை நடக்கும் இப்பணி, இம்முறை இரவு பகலாக பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர் அர்ப்பணிப்பால் இரண்டு நாட்களில் முடிவடைந்தது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க, பிரதியமைச்சர் தபிரசன்ன குணசேன, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இப்பணியை விரைவாக நிறைவு செய்வதற்கு பங்களித்த ஊழியர்களை விசேடமாக பாராட்டியுள்ளனர்.