தேங்கியுள்ள 10 இலட்சம் அஞ்சல் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை!

அஞ்சல் பணியாளர்களின் கடந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக தேங்கியுள்ள 10 இலட்சம் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

தேங்கியுள்ள 10 இலட்சம் அஞ்சல் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை!

 அத்துடன், இன்று முதல் தமது கடமைகளை வழமை போல முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அஞ்சல் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சலகங்களை தனியார் விருந்தகமொன்றுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 8 ஆம் திகதி முதல் இரண்டு நாட்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.