தலாத்துஒயாவில் நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு!

தலாத்துஒயாவில் நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு!

தலாத்துஒயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கிரிமெட்டிய கட்டுகித்துல பகுதியில் ஓடை ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ம் திகதி அன்று காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று மதியம்  ஒடையில் இருந்து வௌியில் எடுக்கப்பட்டுள்ளது.

தலாத்துஒயா கட்டுகித்துல பிரதேசத்தில் வசித்து வந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

மேலதிக விசாரணைகளை தலாத்துஒயா பொலிஸார் பல  கோணங்களில்  மேற்கொண்டு வருகின்றனர்.