'மலையகம் - 200' ஐ முன்னிட்டு வேலைத்திட்ட அங்குரார்ப்பணமும், சின்னம் வெளியீடும் நாளை!
'மலையகம் - 200' ஐ முன்னிட்டு நாம் 200 வேலைத்திட்டம் அங்குரார்ப்பணமும், சின்னம் வெளியிடும் நிகழ்வும் நாளை (05) முற்பகல் 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.

'மலையகம் - 200' ஐ முன்னிட்டு நாம் 200 வேலைத்திட்டம் அங்குரார்ப்பணமும், சின்னம் வெளியிடும் நிகழ்வும் நாளை (05) முற்பகல் 9 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இல.35, " லக்திய மெதுர" - புதிய நாடாளுமன்ற வீதி, பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடக செயலாளர் க.கிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், அதிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.