மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!!

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இதனைத் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அத்துடன், தற்போது பணிபுரியும் பல நாள் மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.