பொரள்ளையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு!
பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த மேஜர் துவான் முதாலிஃப்பின் கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற இருவரையும் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.