இலங்கை கலைஞர்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சி - டிஸ்கோ ராஜா அறக்கட்டளையின் புதிய திட்டம்!

இலங்கை கலைஞர்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சி - டிஸ்கோ ராஜா அறக்கட்டளையின் புதிய திட்டம்!

இலங்கையில் நலிந்து போயுள்ள பலதரப்பட்ட கலைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் டிஸ்கோ ராஜா அறக்கட்டளை புதிய திட்டங்களை வகுத்துள்ளது.

கடந்த வாரம் நிர்வாக குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு அதன் ஊடாக எமது கலைஞர்களை வலுப்படுத்தும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

புதிய நிர்வாக குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று மாலை (23) பொரளை சனசமூக நிலையத்தில் தேனீர் விருந்துபசாரத்துடன் நடைபெற்றது.

இதன்போது, கருத்துக்களை வௌியிட்ட நிர்வாக குழுவினர் மாதாந்தம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திப்புகளை மேற்கொள்வதற்கு இணக்கம் வௌியிட்டனர்.

இந்த சந்திப்புகளின் போது, எதிர்காலத்தில் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல், அறக்கட்டளையின் ஊடாக கலை ஆக்கங்களை தயாரித்தல், குறும்படங்கள் மற்றும் கலைப்படைப்புகளை தயாரித்து வௌியிடல், கலைஞர்களை தேடியறிந்து நேர்காணல்களுக்கு அவர்களை தயார்படுத்தல், தனித்திறமையுள்ள கலைஞர்களை அந்தந்த துறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சிகளை வழங்கல், புதிய கலைஞர்களுக்கு துறைசார்ந்த பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இதன் போது நிர்வாக குழு உறுப்பினர்களின் விபரங்களும் வௌியிடப்பட்டன.