நாட்டுப்பற்றாளர் நாள் பிரான்ஸ் 2024

 

தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமான அன்னை பூபதி அவர்களின்  36வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் நினைவேந்தலும் 

 

இந்நிகழ்வுகள் 21/04/2024 ஞாயிற்றுக்கிழமை  பிரான்ஸில் ட்ரான்சி நகரசபைக்கருகில் 

Salon Roger Petieu மண்டபத்தில் மிகவும் எழுச்சி பூர்வமாக நடைபெற்றிருந்தது.

 இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு அந்தோனி மங்கின் அவர்களும் 

கமித் சபானி அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள். 

 முன்பதாக  திருமதி  ஈழநதி வாசுதேவன் பொதுச் சுடர் ஏற்றினார். 

அதனைத் தொடர்ந்து அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு. கண்ணன் அவர்களால் மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தேசக் கடமைகளைச் தோள்களில் சுமந்தவர்களாக வாழ்ந்து அண்மையில் சாவினை தழுவிக் கொண்ட மாமனிதர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களாக மதிப்பளிக்கப்பட்டவர்களுக்கான ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. 

 தொடர்ந்து ஏனைய நாட்டுப்பற்றாளர்களுக்கும் மாமனிதர்களுக்கும் அனைவராலும் தீபமேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

அகவணக்கத்தைத் தாெடர்ந்து   தலைவர் வாழ்த்து நடனம் செல்வன் ரவிகாந் ஆருஜன் அவர்களால் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து திருமதி தர்சினி முரளி அவர்களால் அன்னை பூபதி அவர்கள் பற்றியும் நாட்டுப்பற்றாளர் நாள் குறித்தும் பிரென்ச் மொழியில் சிறு உரையாற்றப்பட்டது.  

 நிகழ்வில் புலிகளின் குரல் நிறுவனத்தின் உருவாக்கமான திரு யதனின் எழுத்துருவாக்கத்தில்  தமிழீழத்தின் இசை அமைப்பாளர் திரு இசைப்பிரியன் இசையமைத்துப் பாடிய  மாமனிதர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களை போற்றும் பாடல் திரு நாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து திரு அந்தோனி அவர்கள் சிறு உரையாற்றினார்.  தொடர்ந்து திருமதி சுபா குருபரன் அவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் பற்றி உரையாற்றினார். தொடர்ந்து செல்வி சசிதரன் சாகித்தியா அவர்களின் நடனம் இடம்பெற்றது. 

தொடர்ந்து திரு கமித் சபானி அவர்கள் சிறு உரையாற்றினார். 

தொடர்ந்து அனுஷா மணிவண்ணன் அவர்களின் நெறியாள்கையில் அவரது மாணவிகளின்  நடனம்  இடம்பெற்றது. 

தொடர்ந்து திரு நாயகன் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள்  பலரது சுருக்கமான வரலாறுகள் தொடர்பாகவும் சமகால நிலைமைகள் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார். 

 

நிகழ்வில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கான நினைவுப்பாிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

இறுதியாக அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

 தமிழாின் தாயகக் கோசப்பாடலுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவடைந்தது. 

 

இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் உழைத்த அனைவருக்கும் நிகழ்வின் தலைவராக தொகுப்பினை வழங்கிய திருமதி தர்சினி முரளி நன்றிகளைத் தொிவித்திருந்தார்.