அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (3) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் அசாதாரண காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவித்துள்ளார்.
பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கு, மண்சரிவு, பாதை சீர்கேடு மற்றும் பனிமூட்டம் போன்ற பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு உரிய முறையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு பிறிதொரு தினத்தில் பாடத்திட்டங்கள் ஈடுசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.