உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.