உத்தியோகப்பூர்வ பரீட்சை திகதிகளை அறிவித்தது பரீட்சைகள் திணைக்களம்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர, உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகப்பூர்வ திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உத்தியோகப்பூர்வ பரீட்சை திகதிகளை அறிவித்தது பரீட்சைகள் திணைக்களம்..!

இதன்படி 2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள், இந்த ஆண்டு மே மாதம் 6ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள், இந்த ஆண்டு நொவம்பர் மாதம் 25ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ம் திகதி வரையில் இடம்பெறும்.

அதேநேரம் 2024ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் பின்பு அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.