ஜனாதிபதியினால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு நிவாரணம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியினால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு நிவாரணம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பரையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுயதொழில் செய்யக் கூடிய குடும்பங்களை மேம்படுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள் ஊடாக நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டமும் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.    

இதேவேளை, இந்தமுறை கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்று, உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 5000 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுப்பனவு ழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\