வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களின் பணம் அனுப்பும் தொகை அதிகரிப்பு!

வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களின் பணம் அனுப்பும் தொகை கடந்த ஒகஸ்ட் மாதம் 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களின் பணம் அனுப்பும் தொகை அதிகரிப்பு!

வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களின் பணம் அனுப்பும் தொகை கடந்த ஒகஸ்ட் மாதம் 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

 ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 862.7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புதிய தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பும் தொகை 74.4 சதவீதமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.