இலங்கையில் பொருளாதாரம் கணிசமாக முன்னேறியுள்ளது!
இலங்கையின் பொருளாதாரம் கணிசமாக முன்னேற்றம் கண்டிருப்பதாக ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் நிதி அமைச்சர் Suzuki Shunichi இற்கும் இடையில் நேற்று (11) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவத்தை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலைமை சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றம் நம்பிக்கைக்குரியது என்றும், இது இலங்கை மீதான உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஜப்பான் நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.