மீண்டும் ஜப்பானின் சனத்தொகை விகிதம் குறைந்தது!
ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 0.48 வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது.உள்விவகார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஜப்பானில் தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் 47 சதவீதமாக அதிகரிக்கும் என ஜப்பானில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.