வீடுகள் அல்லது தொழில் ஸ்தானங்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

வீடுகள் அல்லது தொழில் ஸ்தானங்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

சுத்திகரிப்புக்காக நீர் பெறும் ஆதாரங்களில் நீர் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வறட்சியான காலநிலையினால் 20 நீர் விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 41 நீர் வழங்கல் கட்டமைப்புகளின் நீர் விநியோகம் குறையக் கூடிய சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 409 மீற்றராக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி 411 மீற்றர் மட்டத்தில் நீர் காணப்பட்ட போதிலும், நீர்மின் உற்பத்தி காரணமாக இரண்டு நாட்களில் நீரின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.