400 கோடி ரூபாய் சொகுசு வாகன மோசடி ஒன்று இலங்கையில் சிக்கியது.

 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட பல சொகுசு வாகனங்களை மோசடி பதிவு செய்த பாரிய  ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

400 கோடி ரூபாய் சொகுசு வாகன மோசடி ஒன்று இலங்கையில் சிக்கியது.

 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதி கொண்ட பல சொகுசு வாகனங்களை மோசடி பதிவு செய்த பாரிய  ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் ஆவணக் காப்பக அதிகாரி ஒருவரும் இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய மற்றுமொருவரும் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 423 சொகுசு வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக வலான ஊழல் தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

சொகுசு வாகன பதிவு தொடர்பான விசாரணையில், இந்த பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையக அதிகாரியிடமிருந்தும் போலியாக பதிவு செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மோசடிக்கு ஆதரவாக செயற்பட்ட மற்றுமொரு குழுவினர் தொடர்பிலான தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஊழல் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்பட்ட 3 மகிழுந்துகளை விடுவிப்பதற்கான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 பேர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய அவர் கைதானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த சந்தேகநபர் அலகுக்கலை நிபுணர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அத்துடன், மேலும் சிலர் இந்த மோசடியில் சிக்குண்டுள்ளனரா? என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.