பெரிய வெங்காயத்தின் விசேட சரக்கு வரி குறைப்பு!

பெரிய வெங்காயத்தின் விசேட சரக்கு வரி குறைப்பு!

நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெரிய வெங்காயத்தின் விலையில் கவனம் செலுத்தி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் அதே வேளையில் நுகர்வோருக்கு நியாயமான விலையாக அமையும், பதிரி பெரிய வெங்காயத்துக்கான குறைக்கப்பட்ட விசேட சரக்கு வரி கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.