மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (05) குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராண்ட் மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 76.77 டொலர்களாகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 73.39 டொலர்களாகவும் குறைந்துள்ளது.

பிராண்ட் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 3% குறைந்துள்ளது, இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு விலை குறைவடைந்த முதல் சந்தர்ப்பமாகும்.

மத்திய கிழக்கில் பகுதியில் அதிகரித்து வரும் மோதல் நிலைமையினால் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படும் என்ற அச்சம் சந்தையில் ஏற்பட்டுள்ளதாலேயே இதற்கான காரணமென தெரியப்படுகிறது.