இலங்கை மத்திய வங்கியின் புதிய சலுகை - கொள்கை வட்டி வீதம் குறைப்பு!

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம், சந்தை வைப்பு வட்டி வீதங்கள் மற்றும் கடன் விகிதங்களுக்கு ஏற்ப குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புதிய சலுகை - கொள்கை வட்டி வீதம்  குறைப்பு!
Central Bank of Sri Lanka's new offer - policy interest rate reduction!

இதன் காரணமாக கடன் வீதங்கள் மேலும் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீடு மற்றும் உலகளாவிய கனியவள சந்தையில் ஏற்படும் விலை உயர்வு காரணமாக பணவீக்கத்தில் திடீர் திருப்பம் ஏற்படலாமென இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

எனினும், சாதாரண சூழ்நிலையில் பணவீக்கத்தை 5 சதவீதமாக பேணுவதற்கு மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுக்குமென மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியம் சுயாதீனமாக இயங்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

ஊழியர் சேமலாப நிதியத்தை 1958ம் ஆண்டிலிருந்து, இலங்கை மத்திய வங்கி பொறுப்பேற்று நடத்தி வருகின்றது. 

எனினும் அதனை நடத்துவது, இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பில் உள்ளடங்காது. 

குறித்த காலப்பகுதியில் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் அந்த பொறுப்பை இலங்கை மத்திய வங்கி பொறுப்பேற்று இதுவரையில் முன்னெடுத்து வந்தது. 

தற்போது, இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டத்திற்கமைய இலங்கை மத்திய வங்கி விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் உறுதிப்பாடு என்ற நோக்கங்களை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானித்தது. 

 இந்தநிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தை பாதுகாக்க இன்னுமொரு சுயாதீன நிறுவனமொன்றை நிதியமைச்சின் கீழ் உருவாக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.